News April 7, 2025
கடலூரில் வேல் கோட்டம் உள்ள கோயில் எது தெரியுமா?

கடலூர் புதுவண்டிபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகும். இங்கு “வேல் கோட்டம்” தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
Similar News
News April 8, 2025
தமிழக ஆளுநருக்கு சாட்டையடி – பண்ருட்டி எம்.எல்.ஏ

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ இன்று தந்த சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக சர்வாதிகாரி போன்று செயல்பட்டு வந்த ஆளுநருக்கு சாட்டையடி., உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
பேச்சுக் குறைப்பாட்டை நீக்கும் பின்னத்தூர் ராமநாதேஸ்வரர்

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் ராமநாதேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் பிரகாரத்தில் சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் பாம்பன் சுவாமிகள் கடும் தவம் மேற்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார் என வரலாறு கூறுகிறது. ராமநாதேஸ்வரர் ஊமைப் பெண்ணை பேச வைத்த சிறப்பும் இந்த ஆலயத்துக்கு உள்ளது. பேச்சு குறைபாடு உள்ளவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் பேச்சு குறைபாடு நீங்கும்.
News April 8, 2025
திட்டக்குடி கள்ள நோட்டு விவகாரம்: முக்கிய குற்றவாளி கைது

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே ரூ. 83,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் செல்வம் விசிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சிடப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த கமல் சென்னையில் கைது செய்யப்பட்டார்.