News April 15, 2025

கடலூரில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

image

கடலூர் எஸ்.பி உத்தரவின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கடலூர் CK பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 25 பேருக்கு சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. OTP தொடர்பான குற்றங்கள், தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், LOAN APPS, SCHOOL SCHOLARSHIP SCAMS பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News

News April 17, 2025

கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள (Marketing Executive) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 17, 2025

 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டாஸில் கைது

image

மங்கலம்பேட்டையில் டியூஷன் சென்டர் நடத்தி வருபவர் வெங்கடேசன் (42). இவர் தனது டியூஷனில் படிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து விருத்தாச்சலம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த நிலையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைப்படி ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி நேற்று வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News April 17, 2025

பண்ருட்டி: ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

image

பண்ருட்டி திருவதிகையில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற விரைவு ரயில் ஒன்று அந்த முதியவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து கடலூர் இருப்பு பாதை ரயில்வே போலீசார், இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!