News September 29, 2024

கடந்த 8 மாதங்களில் 7246 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி

image

விருதுநகர் மாவட்டத்தில் நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 1 மாநகராட்சி 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும் அச்சுறுத்தலாக நாய் தொல்லை உள்ளது. இதில் கடந்த 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டும் 7246 பேருக்கு நாய் கடியால் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News November 20, 2024

ரூ.20 லட்சம் மதிப்பில் சுவாச குழாய் அகநோக்கி இயந்திரம்

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் நுரையீரல் சிகிச்சை பிரிவிற்காக ரூ.20 லட்சம் மதிப்பில்  சுவாசக் குழாய் அகநோக்கி இயந்திரம் வழங்கப்பட்டது. இதனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

News November 20, 2024

திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம்

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சப் டிவிஷன் டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வரும் பொன்னரசு திருச்சுழி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

நவம்பர் 23ல் 450 கிராம ஊராட்சிகளின் கிராம சபை கூட்டம்

image

மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம் தேதி அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 23ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நடைபெறும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.