News April 4, 2025

கச்சநத்தம் சம்பவம் – ஆட்சியர் ஆஜராக உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஏப்.21ல் சிவகங்கை ஆட்சியர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 5, 2025

சிவகங்கையில் ரூ.25 ஆயிரத்தில் வேலை

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை மேலாளார் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 25 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். <> இங்கு கிளிக் செய்து <<>>மே மாதம் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

News April 5, 2025

மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு வாழ்நாள் சிறை

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது கட்டட தொழிலாளி 2020 ல் 8 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 2020 ல் போலீஸ் ஸ்டேஷனில் தந்தைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கில் தொழிலாளிக்கு வாழ்நாள் சிறையும், ரூ.4,100 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

News April 4, 2025

போக்சோ வழக்கில் 4 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

image

திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 9 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (47) என்பவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சிவகங்கை நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் அமர்வு முன்னிலையில் இன்று (ஏப்.04) வந்தது. இதில் பால்பாண்டிக்கு 4 ஆண்டுகள் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!