News April 26, 2025

ஓமலூரில் கலெக்டர் ஆறுதல்

image

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News April 27, 2025

சேலம் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️சேலம் கலெக்டர்- 0427-2450301. ▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 0427-2417575. ▶️உதவி ஆணையர்- 9445000222. ▶️மாவட்ட வருவாய் அலுவலர்- 0427-2450303. ▶️தனித்துணை ஆட்சியர்- 9443797855. ▶️மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்- 0427-2411311. ▶️மாவட்ட ஊராட்சி அலுவலகம்- 0427-2450187. ▶️மாநகராட்சி ஆணையாளர்- 0427-2213131. ▶️மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர்- 0427-2350536. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.

News April 27, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

image

சேலம்மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற அனைத்து புகார்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 27, 2025

சேலத்தில் விபத்து: மாணவன் உயிரிழப்பு

image

சேலத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரின் மகன் நகுல் (17). இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், நண்பரின் புல்லட் வாங்கிக் கொண்டு ஏவிஆர் ரவுண்டானாவில் இருந்து குரங்குச்சாவடி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத வகையில் மேம்பாலத்தின் மீது மோதியத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நகுல் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!