News March 2, 2025
ஓபிஎஸ் ஊருக்குள் கால் வைக்கும் எடப்பாடி

தேனி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை அடுத்து மீண்டும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். இன்று நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசப் போகிறார் என்பது ஆர்வமாக உள்ளது
Similar News
News April 21, 2025
தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி

மதுரையில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் சென்றது. நேற்று மதியம் ஆண்டிப்பட்டி அருகே SSபுரம் சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News April 21, 2025
வீரபாண்டி மாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு பூஜை

வீரபாண்டி ஸ்ரீ மாரியம்மன், 5ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பான கரங்கள் நடைபெற்றன. இதில் வீரபாண்டி பொது மக்களுக்கு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் செய்திருந்தார்.
News April 21, 2025
வடுகபட்டியில் படித்த முன்னாள் மாணவர்களுடன் சாப்பிட்ட கவிஞர்

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது 70,ஆண்டுகள் முன் சேர்ந்து படித்த மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துள்ளனர்