News March 20, 2025
ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

சென்னை அண்ணா சாலையில் சென்ற பேருந்தில், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ஆடையை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணி வியாபாரி சையது அப்துல் ரகுமான் என்பவரை, மாணவி காலணியால் அடித்து போலீசிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், சையது அப்துல் ரகுமான் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 28, 2025
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயின் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு, ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்றுவிப்பாளர், இன்ஜினியர் (JE) ஆகிய பதவிகளில் 20 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள 65 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் இந்த <<-1>>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்ளுக்கு ஷேர் பண்ணுங்க
News March 28, 2025
கணவரை விட்டு ஓடிவந்த நடிகை ரம்பா

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்பா, “ஒருமுறை என் கணவருடன் சண்டை போட்டுவிட்டு, தனது திங்ஸ் எல்லாம் பேக் செய்து எடுத்துக்கொண்டு விமானம் மூலம் சென்னை வந்துவிட்டேன். இது தெரியாமல், கணவர் என்னை கனடாவில் தேடி கொண்டிருந்தார். இதையறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். கோபத்தில் சில சமயங்களில் நான் தைரியமாக முடிவு எடுப்பேன். இல்லை என்றால், வீட்டுக்குள் பெட்டி பாம்பாக உட்கார்ந்திருப்பேன்” என்றார்.
News March 28, 2025
மெட்ரோ ரயில் பணி: போக்குவரத்து மாற்றம்

கொன்னூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, வரும் 30ஆம் தேதி முதல் ஐ.சி.எப், அயனாவரம் வழியாக புளியந்தோப்பு, சென்ட்ரல், பாரிஸ் கார்னர் செல்லும் வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் இடதுபுறம் திரும்பி டேங்க் பங்க் ரோடு – கிருஷ்ண தாஸ் ரோடு, குக்ஸ் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.