News March 30, 2025
ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் செல்வநாயகம் (49). இவர் கடந்த 2022 முதல் 2025 வரையான காலத்தில் தீபாவளி மற்றும் தங்க நாணயம் சிறுசேமிப்பு திட்டம், மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் பிற சேமிப்பு திட்டங்கள் நடத்தி சுமார் 800 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல், பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து செல்வநாயகத்தை கைது செய்தனர்.
Similar News
News April 5, 2025
கடலூரில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை

கடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள Customer Service Engineer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் <
News April 4, 2025
கடலூர்: இன்று ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (04/04/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க..
News April 4, 2025
BREAKING: கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை (05.04.2025) சனிக்கிழமை கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)