News April 15, 2025
ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழப்பு

பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சிறுமிகள் குளிப்பதற்காக சென்றனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிவசக்தி(11), ஸ்வேதா(12) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பவம் தொடர்பாக ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் குழந்தைகளை கண்காணியுங்கள் பெற்றோர்களே.
Similar News
News April 28, 2025
கள்ளக்குறிச்சி எந்த பதவியில் யார்?

▶️ கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்- பிரசாந்த் (04151-228802)
▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- ரஜத் R சதுா்வேதி (04151-221313)
▶️ மாவட்ட வருவாய் அலுவலர்- ஜீவா (04151-228800)
முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்
News April 28, 2025
கள்ளக்குறிச்சி மாணவர்களுக்கு நற்செய்தி

மாவட்டத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான, தொகுதி திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.பிளஸ் 2 வகுப்பு வரை கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், 15 நாட்கள் கிராமங்களில் தங்கும் ஆர்வம் இருக்க வேண்டும். மாதத்திற்கு ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் 30 சதவீத பயணப்படி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
News April 28, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 27-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.