News April 25, 2024

எஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

வைத்தீஸ்வரன் கோவிலில் நேற்று நகரத்தார் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் எஸ்பி மீனா மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டிஎஸ்பி லாமேக் 3 ஆய்வாளர்கள் 3 உதவி ஆய்வாளர்கள் 10 காவல் ஆளினர்கள் 15 சிறப்பு காவல் படை காவலர்கள் 61 ஊர்க்காவல் படை காவலர்கள் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

Similar News

News May 8, 2025

மயிலாடுதுறை: விபத்தில் உயிரிழந்த மாணவன் தேர்ச்சி

image

சீர்காழி அருகே வானகிரி கிராமத்தை சேர்ந்த மாணவன் கபிலன் மேலையூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், கபிலன் 343 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் மாணவனின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News May 8, 2025

மயிலாடுதுறை: வனத்துறையில் வேலை

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <>www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 8, 2025

மயிலாடுதுறை: சீர்காழி மாணவி முதலிடம்

image

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ள தனியார் பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில் பயிலும் மாணவி மதுஷா 596 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சாதனை புரிந்துள்ள மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!