News March 27, 2025
எச்சரிக்கை: மெட்ரோ வேலை காரணமாக குடிநீர் ரத்து

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, ஆயிரம் விளக்கு, தி.நகர், கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் 29ஆம் தேதி காலை 10 மணி முதல் 30ஆம் தேதி காலை 10 மணி வரை குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News April 18, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனித வெள்ளியான இன்று (ஏப்ரல் 18) பெருநகர் மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறையை முன்னிட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது வெயில் அடித்தாலும், இன்றைக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் செய்யுங்கள்.
News April 18, 2025
அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து

அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25G அரசுப் பேருந்து, குமணன்சாவடி அருகே உள்ள மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கிய நிலையில், டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் தடுப்பு சுவற்றில் மோதினாரா? அல்லது பேருந்து பழுது ஏற்பட்டு மோதியதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 18, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (17.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.