News March 19, 2024

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம்

image

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு பணிப்பார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையிலான 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கயல்விழி ஆத்தூருக்கும் , கீதாலட்சுமி தலைவாசலுக்கும்  பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 14, 2025

அரசு ஐ.டி.ஐ.,தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், பிரதம மந்திரி தேசிய தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம், கோரிமேடு அரசு ஐடிஐ வளாகத்தில் நாளை 15-ம் தேதி நடக்கிறது. அனைத்து தொழிற்பிரிவுகளிலும் ஐடிஐ, என்சிவிடி, எஸ்சிவிடி, மற்றும் சிஇ சான்றிதழ் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

News April 14, 2025

சேலம் வழியாக மங்களூருவுக்கு சிறப்பு ரயில்

image

பண்டிகைக் கால விடுமுறை, கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, வரும் ஏப்.17- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கும், ஏப்.20- ஆம் தேதி மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06579/ 06580) இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

News April 14, 2025

தமிழ் புத்தாண்டு: சேலம் முருகன் கோயில்கள் டாப் லிஸ்ட்!

image

தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகனை தரிசிக்க விரும்பும் சேலம் பக்தர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் ▶️முத்துமலை முருகன் (ஏத்தாப்பூர்)
▶️காவடி பழனி ஆண்டவர் (சூரமங்கலம்)
▶️காளிப்பட்டி முருகன் (ஆட்டையாம்பட்டி)
▶️கந்தாஸ்ரமம் கோயில் (சேலம் மாநகர்)
▶️கொங்கணாபுரம் புது பழனி முருகன் கோயில்
▶️கஞ்சமலை கோயில் (இளம்பிள்ளை)
▶️செக்காரப்பட்டி பழனியாண்டவர் (ஓமலூர்). இதை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!