News October 15, 2024

ஊட்டி மலை ரயிலுக்கு 116ஆவது பிறந்தநாள்

image

நீலகிரி, 1899 ஜூன் 15இல் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில், 1909 அக்டோபர் 15 முதல் குன்னூரில் இருந்து ஊட்டி வரை நீட்டிக்கபட்டது. இந்த தினம் ஆண்டுதோறும் நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று ஊட்டி ரயில் நிலையத்தில் 116ஆவது ரயில் தினம் கொண்டாடப்படுகிறது.

Similar News

News November 19, 2024

நீலகிரி தலைப்பு செய்திகள்

image

1.நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கூட்டுறவு வார விழாவில் அரசு கொறடா பங்கேற்பு
3.நீலகிரியில் வன விலங்கு கணக்கெடுப்பு தொடக்கம்
4.ஊட்டியில் வீடு கட்டி தருவதாக ரூ.1.50 கோடி மோசடி
5. ஜனாதிபதி வருகை முன்னேற்பாடு குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

News November 19, 2024

ஜனாதிபதி வருகை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

News November 19, 2024

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து விபத்து

image

குன்னூர் மலைப்பாதையில் காட்டேரி அருகே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து மேல் நோக்கி வரும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ரோட்டின் அருகே உள்ள தடுப்பின் மீது ஏறி நிற்கிறது. தகவல் கிடைத்த காவல்துறை மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் விபத்து பகுதிக்கு விரைந்துள்ளனர்.