News April 13, 2025
ஊட்டி உருளை கிழங்கு இன்றைய விலை விவரம்

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஊட்டி உருளை கிழங்கை தினசரி பொது ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. அதன்படி இன்றைய ஏலத்தில் ஒரு மூட்டை உருளை கிழங்கு முதல் ரகம் அதிகபட்சமாக ரூ.1230 க்கும், குறைந்தபட்சமாக ரூ.700 க்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 700 மூட்டை விற்றது.
Similar News
News April 18, 2025
நீலகிரி: கைதியை அடித்த 6 போலீஸ் சஸ்பெண்ட் !

நீலகிரி: கூடலூர், தேவர்சாலை பாடந்துறையைச் சேர்ந்த ந்ஜமுதீன்(33). இவர் போதைப் பொருள் கடத்தி வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அவரை போலீசார் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, நிஜாமுதீன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, நீதிபதி விசாரணையில் கூடலூர் துணை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன் உட்பட ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
News April 17, 2025
குன்னூர்: 5% ஊக்கத்தொகை என அறிவிப்பு

குன்னூர் நகராட்சி சார்பில் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் குன்னுார் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் வசித்து வரும் பொதுமக்கள் வியாபாரிகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் நகராட்சி சார்பில் அவர்களுக்கு 5 % ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதை மக்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்
News April 17, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

நீலகிரி மக்களே அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் பண்ணுங்க