News January 25, 2025
உள்துறை அமைச்சரிடம் மாணவர் அமைப்பினர் கோரிக்கை
புதுச்சேரி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் நேற்று வில்லியனூரில் உள்ள உள்துறை அமைச்சர் இல்லத்தில் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து, பெண் ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் டீனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Similar News
News January 27, 2025
கோர்ட்டில் அத்துமீறி கூச்சலிட்ட பெண் மீது வழக்கு
காரைக்கால் நீதிமன்றத்தின் குற்றவியல் நடுவர் 1 அலுவலக வளாகத்தில் மணிமேகலை (42) என்பவர் கோர்ட் ஊழியர்களைப் பார்த்து கூச்சலிட்டதாக, கோர்ட் நடவடிக்கைகளை செல்போனில் படம் எடுத்துள்ளார். அவரை தடுத்த பெண் காவலர் ஜெயசித்ராவை கையில் கடித்து காயப்படுத்தியுள்ளார். இது குறித்து, கோர்ட் சரஸ்வதி சிவசண்முகம் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
News January 27, 2025
8 இளநிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
புதுச்சேரி நிதித் துறை துணை சார்பு செயலர் ரத்னகோஷ் கிேஷார் சவுரே நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரியில் நிதித் துறையில் பணியாற்றும் எட்டு இளநிலை கணக்கு அதிகாரிகளுக்கு சீனியர் கணக்கு அதிகாரியாக பதவி உயர்வு அளித்து நிதி துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அந்த எட்டு பேர் அந்தந்த பணியிடங்களுக்கு விரைவில் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது
News January 26, 2025
டாக்டர் கே.எம்.செரியன் மறைவு: துணைநிலை ஆளுநர் இரங்கல்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். இதய அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர் செரியன் ஆற்றிய பங்களிப்புகள் தனி முத்திரையை பதித்துள்ளது. செரியனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.