News March 20, 2025

உளுந்தூர்பேட்டையில் விமான ட்ரோன் பூங்கா

image

உளுந்தூர்பேட்டை அருகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடு பாதையில் விமான பரிசோதனைக் கூடம், விமானப் பயிற்சி நிலையம், ட்ரோன் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசிடம் நிலத்தை வழங்க வலியுறுத்தி விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் இன்று(மார்.19) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.

Similar News

News March 20, 2025

கள்ளக்குறிச்சியில் நேருக்கு நேர் பைக்குகள் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரியலூரிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயம் அடைந்த நபர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 19, 2025

கள்ளக்குறிச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல் 

image

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 20 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என  ஆட்சியர் தகவல்.

News March 19, 2025

8th Pass போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கு, தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். <>இந்த விண்ணப்பத்தை <<>>பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!