News April 9, 2025
உளுந்தூர்பேட்டை அருகே முதியவர் சடலம் கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி, களவனூர் அருகே முதியவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் நேரடியாக வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சென்று இறந்தவர் யார் என்றும், கொலையா, தற்கொலையா என்றும் பல்வேறு கோணங்களில் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 29 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இன்று வெளியில் வேலைக்கு செல்வோர் மற்றக்காமல் குடை அல்லது ரெயின் கோர்ட் எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
குழந்தை இல்லாத சோகம்; பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி, ஏ.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் மணிமொழி. இவருக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல
News April 18, 2025
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் தளமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். தீராத நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க