News April 25, 2024
உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு ஊர்வலம் டீன் சீதாலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலம் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் செவிலியர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
Similar News
News April 29, 2025
சிவகாசி: பட்டாசு ஆலைகளில் இடிதாக்கி கட்டாயம்

சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகளில் சமீப நாட்களாக இடி மின்னல் தாக்கி விபத்து ஏற்படுவது தொடர்கிறது. இதை தடுக்க பட்டாசு ஆலைகளில் பட்டாசு தேக்கி வைக்கும் அறைகள் மட்டுமல்லாமல் அனைத்து பட்டாசு தயாரிப்பு அறையிலும் இடிதாக்கி அமைத்திருந்தால் மட்டுமே பட்டாசு ஆலைகள் மீது இடி மின்னல் தாக்கும் போது விபத்து ஏற்படுவது குறையும் என வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
News April 29, 2025
14 தனிப்பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்

எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வந்த ஜெயக்குமார், மல்லி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி டவுன் காவல் நிலைய தலைமை காவலர் சண்முகராஜ், மாரனேரி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், மாரனேரி காவல் நிலைய தலைமை காவலர் கார்த்தி, சிவகாசி டவுன் காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் திருத்தங்கல்லுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
News April 29, 2025
விருதுநகரில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு ஆட்சியர் அழைப்பு

விருதுநகரில் தமிழ் வார விழாவை முன்னிட்டு மே.4 அன்று பொதுமக்களுக்கான 100 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களை தவிர) ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ஆர்.எஸ்.ஆர். மெட்ரிக் பள்ளி, விருதுநகர் ஹாஜிபி பள்ளி, அருப்புக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல்நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 96988-10699 இல் அழைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.