News March 11, 2025
உடல்நலம் பாதிக்கப்பட்ட 24 வயது நபர் தற்கொலை

திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் முகமது (வயது 24). மளிகைக்கடை உரிமையாளர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசீம் முகமது நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறிங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
தீமைக்கு எதிராய் போராடுங்கள்

திருப்பத்தூர் மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க மக்களே
News April 29, 2025
திருப்பத்தூரில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

திருப்பத்தூர் அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 140 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <