News April 7, 2025

உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் காளையார்கோவில் வட்டம் பரமக்குடி மெயின் ரோடு வெள்ளையம்பட்டி பாஸ்டின் நகரில் அமைந்துள்ள A.S.கார்டன் மஹாலில் வரும் 16ஆம் தேதி பிற்பகல் 04 மணி முதல் 06 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 8, 2025

அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 4 பணியாளர், 29 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஏப்ரல்-23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க*

News April 8, 2025

சிவகங்கை மாவட்டத்தில் ஏப்.10ல் மதுபான கடைகளுக்கு லீவ்

image

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 10.04.2025 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் அத்தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 8, 2025

சிறுமியை பாலியல் கொடுமை செய்தவருக்கு வாழ்நாள் தண்டனை

image

சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரை அடுத்துள்ள கொத்தரி கிராமத்தைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி கர்ப்பமானார். காரைக்குடி மகளிா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, இந்த விசாரணையானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், பழனிச்சாமிக்கு நேற்று (07) வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்தார்.

error: Content is protected !!