News April 13, 2025
ஈரோடு: ஏர்கன்னால் சூட்டதில் ஒருவர் காயம்!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள, ஜிஎஸ் காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், சொந்தமாக ‘ஏர்கன்’ வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம், இவரது வீட்டிலிருந்த சிறுவர்கள், எதிர்பாராதவிதமாக ஏர்கன்னை எடுத்து வெங்கடாச்சலத்தை சுட்டுள்ளனர். இதில் இடுப்பின் கீழ் பகுதியில், அலுமினிய குண்டு பாய்ந்தது, வெங்கடாச்சலம் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 16, 2025
பார்மஸிஸ்ட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி !

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் (பார்மஸிஸ்ட்) பணிபோட்டி தேர்வுகளுக்கான இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0424-2275860, 9499055943 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !
News April 16, 2025
பவானியில் பாலியல் தொழில் !

பவானி கூடுதுறை ரோட்டில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்தத் தகவலின் பேரில் பவானி டி.எஸ்.பி ரத்தினகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் தங்கி இருந்த ஐந்து நபர்கள் மற்றும் ஐந்து பெண்களை விசாரித்தனர். விசாரணையில் அங்கு பாலியல் தொழில் நடந்து வந்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து விடுதியின் மேலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
News April 15, 2025
தீராவினை தீர்க்கும் திண்டல் முருகன்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் முருகன் கோயிலுக்குப் பல சிறப்புகள் உண்டு. மொத்த ஊரின் பஞ்சத்தை தீர்த்தக் குமரன் என தலபுராணம் கூறுகிறது. இந்தக் கோயிலில் வழிபட்டால் வாழ்வின் தீரா வினையும் தீரும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் தீராத பிரச்னை எதுவிருந்தாலும் இங்கு வந்த முருகனை வழிபட்ட கணத்தே அது தீர்ந்துவிடுமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!