News June 25, 2024
ஈரோடு எம்.பி. பிரகாஷ் பதவியேற்பு

ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரகாஷ், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News August 7, 2025
ஈரோடு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த புகாரின் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சித்தோடு சாணார்பாளையத்தை சேர்ந்த சூர்யா (25) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சூர்யாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
News August 6, 2025
மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர்

தாளவாடி ஊராட்சி ஒன்றியம் ஆசனூர் அருகே அரேப்பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறித்து ஆய்வு செய்தபோது புத்தகங்களை வாசிக்க சொல்லி ஆய்வில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்களுடன் இருக்கையில் அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் உடன் இருந்தனர்,
News August 6, 2025
ஈரோடு: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

ஈரோடு மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<