News March 27, 2025

இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

image

ஆலங்குடி அருகே பிலாபுஞ்சை பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (21) என்பவர் கடந்த 23ஆம் தேதி தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் பலா காய்களைப் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 4, 2025

வீடு மனை யோகம் அருளும் செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயிலில்

image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க.. 

News April 4, 2025

புதுக்கோட்டையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி(Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 4, 2025

புதுக்கோட்டையில் இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 03.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!