News May 18, 2024

இளம்பிள்ளை அருகே தவ மையம் திறப்பு

image

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயில் சார்பில் ராமாபுரம் மாரியம்மன் கோயில் திடலில் தவ மையம் திறப்பு விழா வருகிற 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் காயகல்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும்மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News April 21, 2025

MSME- சேலம் மாவட்டத்திற்கு மூன்றாமிடம்!

image

தமிழகத்தில் ‘உத்யம்’ இணையதளத்தில் பதிவுச் செய்துள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் சென்னை, 3.75 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கோவை 2.58 லட்சத்துடனும், சேலம் 1.77 லட்சத்துடனும் மூன்றாமிடத்தில் உள்ளது. பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2025

உங்க அக்கவுண்ட்ல பணம் பத்திரமா இருக்கணுமா?

image

சேலம் மக்களே அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என சேலம் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

News April 20, 2025

இரவு நேரங்களில் ஆபத்தா? உடனே அழையுங்கள்!

image

சேலம் மாவட்டம் காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றாலோ, விபத்து என்றாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட மொபைல் நம்பரை அழைத்தால், காவலர்கள் உடனே உதவிக்கு வருவார்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தி அந்த எண்களையும் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!