News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.

Similar News

News August 9, 2025

சிவகங்கை: அரசு வேலை.. ரூ.68,000 வரை சம்பளம்!

image

சிவகங்கை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.28,500 – 68,400 வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 15க்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 9, 2025

சிவகங்கை: அஜித்குமார் வழக்கு CBI திடுக் தகவல்..!

image

மடப்புரம் அஜித் உயிரிழந்த வழக்கில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தன்னிடம் கொடுத்ததாக நிகிதா கூறியிருந்தார். மேலும் காரை வடகரை வரை அஜித்தும், அவர் நண்பரும் ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. இதில், சிபிஐ அதிகாரிகள் வடகரையில் விசாரணையை தொடங்கினர். CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், நிகிதா தான் காரை ஓட்டி வந்ததும், பார்க்கிங்கை விட்டு கார் வெளியே செல்லவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News August 8, 2025

ஆக.11 போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி

image

தமிழகம் முழுவதும் 11.8.2025 அன்று முதலமைச்சர் காணொலி காட்சியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடக்க இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர் மன்றங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு.

error: Content is protected !!