News April 6, 2025
இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலி

விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் தனியார் மில் அருகே வந்து கொண்டிருந்தபோது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பிரபாகரன் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News April 9, 2025
விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் சூலக்கரையில் நாளை மறுநாள்(ஏப்.11) காலை 10 – 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் இங்கே <
News April 9, 2025
ஊசி செலுத்திய பெண் திடீர் மரணம்

சிவகாசி அருகே பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி மகேஸ்வரி (35). இவருக்கு நேற்று தலைவலி ஏற்பட்டதால் சிவகாசி பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது ஊசி செலுத்தியுள்ளனர். பின்னர் வீட்டில் வந்து தூங்கிய மகேஸ்வரிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 8, 2025
கந்துவட்டி கேட்டு வியாபாரிக்கு கொலை மிரட்டல்

ஏழாயிரம்பண்ணை அருகே கண்டியாபுரத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி ராசகுரு (27), அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரையிடம் ₹15,000 வட்டிக்கு பணம் பெற்று, சரிவர பணம் செலுத்தாததால், ராசகுருவின் இருசக்கர வாகனத்தை, செல்லத்துரை பறிமுதல் செய்துள்ளார். பின்னர், மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் செலுத்தக் கூறி கொலை மிரட்டல் விடுத்துளார். இதுகுறித்த புகாரில்பேரில் செல்லத்துரை மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.