News March 20, 2025
இராம்நாதபுரம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி – கலெக்டர் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச்.25 முதல் வார நாட்களில் காலை 10 மணி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர் தங்கள் புகைப்படம், சுய விவரங்களுடன் 04567-230160 என்ற எண் (அ) 73394 06320 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர்
Similar News
News March 21, 2025
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. *ஷேர்
News March 21, 2025
இறந்தவர்களின் உடலை தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம்

பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணிச்சியேந்தல் கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு ஊரின் நடுவே அமைந்துள்ள கால்வாயை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் செல்வதால் கிராம மக்கள் இறந்தவரின் உடல்களை தண்ணீர்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. முறையாக பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.
News March 21, 2025
இராமநாதபுரத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.ஆர் சேதுபதி நகரில் நேற்று(மார்ச்.20) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி செய்து வந்த பழனி என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை இராமநாதபுரம் அப்பாஸ் அலி அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சா காவல் துறை உதவியோடு உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.