News March 20, 2025
இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Medical Officer, Security, Radiographer. என மொத்தமாக 17 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் 25-03-2025. 10th, B.Sc, Diploma, ITI, M.Sc, MBBS, MSW படித்த நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News March 21, 2025
இராமநாதபுரத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.ஆர் சேதுபதி நகரில் நேற்று(மார்ச்.20) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி செய்து வந்த பழனி என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை இராமநாதபுரம் அப்பாஸ் அலி அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சா காவல் துறை உதவியோடு உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
News March 21, 2025
குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்ற குடும்ப தலைவி

திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரையரசன் இவரது மகள் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யாவின் கணவர் மதன்பாண்டி சென்னையில் பொறியாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஐஸ்வர்யா குரூப் ஒன் தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ளார். குடும்ப தலைவியாக இருந்து முதல் தேர்விலேயே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. *ஷேர்
News March 21, 2025
இராமேஸ்வரத்தில் ரூ.6.43 கோடியில் படகு தளம்

மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தில், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி கடல் வழி படகு பயணம் விரைவில் துவங்க உள்ளது. அக்னி தீர்த்த கடற்கரையில் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் படகு தளம் அமைய உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து தேவிபட்டினம், வில்லுாண்டி தீர்த்தம், தனுஷ்கோடி பகுதிக்கு கடல் வழி சுற்றுலா படகு சவாரி ஏற்படுத்தப்படுகிறது. படகு தளம், ‘டி’ வடிவில் 120 மீ., நீளம், 7.5 மீ., அகலம் 6 அடி உயரத்தில் அமையவுள்ளது. *ஷேர்