News March 12, 2025
இராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இராம்நாடு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு. *ஷேர் செய்து பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்*
Similar News
News April 20, 2025
தலைமன்னார் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி பெண்

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை மாற்றுத்திறனாளி பெண் உட்பட 10 நீந்தி கடந்து வந்தனர். மும்பையை சேர்ந்த ஷஸ்ருதி மற்றும் பாலா கணேஷ் இருவரும் மாற்றுத்திறனாளிகள் நேற்று முன்தினம் காலை தலைமன்னார் கடலில் குதித்து நீந்த துவங்கினர். அவர்களுடன் 8 வீரர்களும் நீந்த துவங்கினர். இதில் மாற்றுத்திறனாளி ஷஸ்ருதி 11 மணிநேரமும், பாலா கணேஷ் 10:30 மணிநேரமும் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.
News April 20, 2025
வழிவிடு முருகன் ஆலயத்தில் திரைப்பட பூஜை துவக்கம்

சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி மகன் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் போர்கள் ஓய்வதில்லை திரைப்பட பூஜை ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருட்டுக்கு கண் இருக்கு உள்பட குறும்பட யூடியூப் நடிகர் மண்டபம் எம் எஸ் ராஜ், அமமுக தலைமை கழக பேச்சாளர் மண்டபம் ராஜா முஹமது உள்பட பலர் பங்கேற்றனர்.
News April 20, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல் 19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.