News November 11, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு
தேனி மாவட்டத்தில் இன்று (11.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2024
தேனியில் வாக்காளர் சிறப்பு முகாம் – ஆட்சியர்
தேனி மாவட்டத்தில் நவ.23 (சனி), நவ.24 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்திலுள்ள 563 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற உள்ள இரண்டாவது சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்று படிவங்களை பூர்த்தி செய்து, மைய அலுவலர் (DLO) / வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.
News November 19, 2024
தேனியில் 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர்
தேனி மாவட்டத்தில் நவ.1 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தற்போது 130 கிராம ஊராட்சிகளில் வருகின்ற நவ.23ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
தேனி: பெண்கள் சுயதொழில் துவங்க 50,000 மானியம்
தேனி மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தினை பெற தகுதியான பெண்கள் https://theni.nic.in என்ற இணையதளம் மூலம் டிச.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.