News April 4, 2025
இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் 03.04.2025 10 மணி முதல் 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
News April 11, 2025
தேனி: பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது கார் மோதி 7 பேர் காயம்

கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு பஸ் ஏறுவதற்காகப் பயணிகள் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த பாஸ்கரன் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர். காரை ஒட்டி வந்த கம்பத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் கிஷோர்குமார் 32 , கைது செய்யப்பட்டார்.
News April 10, 2025
இன்றைய தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 10.04.2025 வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.