News April 3, 2024
இரவு பகலாக ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பு

ஊட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லட்டி பகுதியில் நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று மாலை உதய சூரியன் சின்னத்திற்கு வாகனம் மீது நின்றபடி ஓட்டு கேட்டார். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருப்பதாக சுற்றுலா துறை மந்திரி ராமசந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் உடன் இருந்தார்.
Similar News
News April 19, 2025
தீராத நோயை தீர்க்கும் கோத்தகிரி கோயில்!

நீலகிரி, கோத்தகிரி அருகே பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வெற்றிவேல் முருகன் இடது பாகத்தில் மயில் பீலியுடன் அபூர்வமாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் தீராத நோய், குடும்ப பிரச்சனை, நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. குடும்ப பிரச்சனையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 19, 2025
நீலகிரி: ரூ.20 கோடியில் உள்கட்டமைப்பு அமைச்சர்

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டார். அதில் நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா உள்கட்டமைப்பு வசதி ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 19, 2025
குன்னூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் கைது!

குன்னூரை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இதனிடையே அவரது 16 வயது பேத்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில், சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இது குறித்து விசாரித்ததில், முதியவர் சிறுமியை கர்ப்பமாக்கியது தெரிந்தது. பின்னர் முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.