News March 12, 2025

இரவு நேர ரோந்து பணியில் காவல் அதிகாரிகள்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2025

ரேஷன் கார்டு – கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில்பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறாத ரேஷன் கார்டுதாரர்கள், அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை என்றால், அவர்கள் உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் www. www.mpds.gov.in இணையதளம் மூலமாக ரேஷன் கார்டை பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்

News March 13, 2025

மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

image

உலக தண்ணீர் தினமான வரும் 22ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்ட நிகழ்வுகளை மொபைல் செயலி வாயிலாக உள்ளீடு செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 12, 2025

காடையூர் அருகே வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காடையூர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (68). மூதாட்டியான இவர், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது ஆட்டுப்பட்டிக்குள் இன்று அதிகாலை புகுந்த வெறி நாய்கள், பட்டியில் இருந்த 4 வெள்ளாடுகளை கடித்து குதறியது. இதில் ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக போலீசார் மற்றும் கால்நடைத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!