News May 15, 2024
இபிஎஸ்-க்கு ஆட்டுக்குட்டி பரிசு வழங்கிய நிர்வாகிகள்

அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருக்கு ஆட்டுக்குட்டியை சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது அருகில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் நகர செயலாளர் மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News April 20, 2025
இரவு நேரங்களில் ஆபத்தா? உடனே அழையுங்கள்!

சேலம் மாவட்டம் காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றாலோ, விபத்து என்றாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட மொபைல் நம்பரை அழைத்தால், காவலர்கள் உடனே உதவிக்கு வருவார்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தி அந்த எண்களையும் அறிவித்துள்ளனர்.
News April 20, 2025
சேலம் வழியாக பாட்னாவுக்கு கோடைக்கால சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வரும் ஏப்.25, மே 02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவிற்கும், மறுமார்க்கத்தில், ஏப்.28, மே 05, 12, 19, 26, ஜூன் 02 ஆகிய தேதிகளில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்; டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
News April 20, 2025
கஞ்சா ஹோம் டெலிவரி: தாய், மகன் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூரில் கஞ்சாவை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ததாக தாய், மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்கொடி, அவரது மகன் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகன் கஞ்சா விற்ற சம்பவம் ஓமலூர் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.