News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

கடலூர் மாவட்டம், வில்வராயநத்தத்தில் உள்ள வில்வநாதீஸ்வரர் கோயிலில் வில்வநாதீஸ்வரர், திரிபுர சுந்தரி தாயாருடன் அருள்பாலிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் பெயர்ச்சியில் இன்று மாலை 4:20 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

Similar News

News April 26, 2025

என்எல்சியை மூட வேண்டும்: அன்புமணி அறிக்கை

image

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே என்.எல்.சியை உடனடியாக மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 26, 2025

கடலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சென்னை, கிண்டியில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான நேரடி சேர்க்கை முகாம் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 5.5.2025 முதல் 7.5.2025 வரை நடக்கிறது. இதில் 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டபடிப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை 9677943633, 9677943733 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News April 26, 2025

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி- ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுபோட்டி 9.5.2025 அன்று திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு 10.5.2025 அன்று தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியிலும் நடைபெறும். இதில் கலந்துகொள்ள https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் 7.5.2025க்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE!

error: Content is protected !!