News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் மற்றும் கேது தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 26, 2025

காஞ்சிபுரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 26, 2025

எதிரிகள் தொல்லை நீக்கும் ஜய அனுமன்

image

காஞ்சிபுரம் மாவட்டம் மகாரண்யம் பகுதியில் கன்யாகுமரி ஜய அனுமன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலித்து வரும் ஜய அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், திருமணம் தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்!

News April 26, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு 3,309 விண்ணப்பம் 

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்கள், எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதாக, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில், அங்கன்வாடி பணியிடங்களுக்கு 2,587 பேரும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 136, அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 586 என மொத்தம் 3,309 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.

error: Content is protected !!