News March 19, 2025
இந்திய கடற்படையில் 327 காலிப்பணியிடங்கள்

இந்திய கடற்படையில் 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் – 57, லஸ்கார்- I – 192, தீயணைப்பாளர் – 73, டோப்பஸ் – 5 என நிரப்பபடவுள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 1. இதுகுறித்து மேலும் அறிய <
Similar News
News March 19, 2025
சுனிதா வில்லியம்ஸ்க்கு புதுவை முதல்வர் வாழ்த்து

இந்திய வம்சாவளியைச் சார்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இவரது மனவலிமை, தன்னம்பிக்கை, நிபுணத்துவம் போன்றவை மனிதகுலத்திற்கு புதிய உத்வேகத்தைத் தருகின்றன. சுனிதா வில்லியம்ஸ் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ புதுச்சேரி ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News March 19, 2025
இனி ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் 7ஆம் நாளான இன்று, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அவரவர் வீடுகளிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். முன்பெல்லாம் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் இனி, ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு வந்தடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த ஹேப்பி நியூஸை SHARE பண்ணுங்க.
News March 19, 2025
புதுச்சேரி: மஞ்சள் அட்டைக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் சிவப்பு அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று இன்று மஞ்சள் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.