News April 12, 2025
இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த<
Similar News
News April 14, 2025
இரவு ரோந்து பணி: போலீசார் விவரம் வெளியீடு…!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் 14.04.2025 அன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணிக்காக 1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.
News April 14, 2025
விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க
News April 14, 2025
ராணிப்பேட்டை: பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிகலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்படும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00 மணி ஆகும். இதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெறும்.