News April 18, 2024
இதுவரை ரூ.2.62 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்
பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தேர்தலில் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காக பறக்கும் படையினர், வருமானவரித் துறையினர் போன்ற குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை ரூ.2.62 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்களையும், மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேற்கண்ட தகவல் இன்று (ஏப்.18) காலை தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 20, 2024
நெல்லை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்கள் தடுக்க நாள்தோறும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் காவல் உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 20, 2024
மக்கள் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் – ஆட்சியர்
நெல்லையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளபெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் கூறியுள்ளார்.
News November 20, 2024
நெல்லையில் 95 மிமீ மழை பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரை 95 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டரும் அதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் 16 மில்லி மீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 14 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 11 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.