News April 24, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 24, 2025

வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திரிசூலநாதர்

image

சென்னையில் திரிசூலம் ரயில் நிலையம் அருகே, நான்கு மலைகளுக்கு நடுவே திரிசூலநாதர் திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. இந்த சிவ ஸ்தலத்தை தனது ஆணவம் அடங்கும் பொருட்டு பிரம்மா நிர்மாணித்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. எனவே இங்கு வந்து வழிபட்டால் ஆணவம் அழிந்து வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு சுபிட்சமான வாழ்க்கையை வாழலாம் என்பது நம்பிக்கை. ஷேர்

News April 24, 2025

பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது

image

சாலிகிராமம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று (ஏப்ரல் 23) அந்த இடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

News April 24, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (23.04.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்

error: Content is protected !!