News March 27, 2024
ஆலத்தூர்: விவசாயி தூக்கிட்டு தற்கொலை

ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). விவசாயியான இவர் குடும்ப பிரச்னை காரணமாக, தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது மகன், ராமசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
பெரம்பலூர்: கோடை விடுமுறைக்கு சூப்பர் ஸ்பாட்

பெரம்பலூர், லாடபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள பச்சை மலையில் எழில் மிகு மயிலூற்று அருவி உள்ளது. கோடையில் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் அசதி இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கு இந்த அருவிதான் சொர்க்கம். பருவமழையில் செழித்து கோடையில் நமக்கு அமுதாக மாறும் இந்த அருவிவை தேடி மக்கள் படையெடுத்து வருகின்றனர். பெரம்பலூர் மட்டுமின்றி திருச்சி கரூர் போன்ற அண்டை மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர். SHARE IT.
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <
News April 18, 2025
பெரம்பலூர்: ரேஷன் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி மையம் 1800 425 5901 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம். மேலும், www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம். ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க, 18005995950 என்ற எண்ணை பயன்படுத்தலாம். இந்த தகவலை பிறருக்கு ஷேர் செய்யவும்