News November 8, 2024
ஆபாச படம்: தென்காசி SP கடும் எச்சரிக்கை!
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவர்களிடமிருந்து ஆபாச போட்டோ அல்லது வீடியோக்களை பெறுதல் & அவற்றை காண்பித்து மிரட்டும் நபர்கள் மீது காவல்துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் பெண்களின் ஆபாச படங்கள அல்லது வீடியோக்களை பிறருக்கு வாட்ஸ் அப் & இதர இணையதளங்களில் பகிர்வதும் குற்றமாகும் என தெரிவித்துள்ளார.
Similar News
News November 19, 2024
தமிழ்நாடு ஹோட்டல் வைத்துள்ள விளம்பர பலகை – அதிர்ச்சி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஹோட்டல் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு 105 ரூபாயில் நல்லஉணவு வழங்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த விளம்பர போர்டுக்கு கீழே மதுபான விற்பனை கூடம் குறித்த விளம்பரம் இடம் பெற்றுள்ளது. இது ஆன்மீகவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 19, 2024
பொதிகை புத்தகத் திருவிழா – சிறப்பு விருந்தினர்கள்
தென்காசியில் நடைபெற்று வரும் மூன்றாவது பொதிகை புத்தகத் திருவிழாவிற்கு நவ.22 அன்று சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ. இறையன்பு “புத்தகப் புழு” என்ற தலைப்பிலும், பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா “ஒளியுறும் அறிவு” தலைப்பிலும் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். நாளை (நவ.20) “நவீன இலக்கிய வாசிப்பின் வசீகரங்கள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லத்துரை சிறப்புரையாற்ற இருக்கிறார்.
News November 19, 2024
தென்காசி ரேசன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு!
தென்காசி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் நரசிம்மன் நேற்று(நவ.,18) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட ரேசன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வானது நவ.,25ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடைபெற உள்ளது. www.drbtsi.in இணையதளம் வழியாக அனுமதிச்சிட்டை பதிவிறக்கம் செய்து கலந்து கொள்ளலாம் என்றார். SHARE IT.