News April 7, 2025

ஆண்டாள்,ரெங்கமன்னார் ஐந்தாம் நாள் காலை புறப்பாடு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 5-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Similar News

News April 12, 2025

விருதுநகரில் 112 பேர் அதிரடி கைது

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க பழைய ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2025

விருதுநகரில் தியேட்டர் பவுன்சர் தாக்குதல்

image

விருதுநகரில் உள்ள தனியார் திரையரங்கில் நேற்று முன்தினம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இதில் அஜித் ரசிகர்களுக்கும், தியேட்டர் பவுன்சர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் பணி முடித்து வந்த பவுன்சிலர் தனுஷ் குமாரை நகராட்சி திமுக கவுன்சிலர் மணிமாறன் உளிட்டோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் கவுன்சிலர் மணிமாறன் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 12, 2025

விருதுநகரில் இலவச நீட் பயிற்சி

image

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் +2 படித்த 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவச நீட் மற்றும் கியூட் நுழைவு பயிற்சி ஏப்.30 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு குறித்து முழு பயிற்சி அளிக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!