News June 10, 2024

ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 190 மனுக்களை ஆட்சியர் பெற்றார். இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Similar News

News April 20, 2025

காட்டுப்பன்றிகள் மோதல்: ஒருவர் படுகாயம்

image

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருபவர் கண்ணன்(54). இவர் நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு தனது பைக்கில் சத்திரம் கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென 4 காட்டுப்பன்றிகள் ஓடி வந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறிய கண்ணன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

News April 19, 2025

மணிமேகலை விருது மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கும்,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது என மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்

News April 19, 2025

அரியலூர்: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

image

அரியலூரில் இருந்து 15 கிலோ மீட்ட்ர் தொலைவில் வெளிநாடு நாட்டில் இருந்து அதிகளவு பறவைகள் வரும் இடம் உகரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் அதிகளவில் நில பறவைகள்,நீர் பறவைகள் செயல்கள் நாம் காணும் போது நம் கண்ணுக்கு அமைதியை ஏற்படுத்தும்,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!