News March 22, 2025

ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலைக்கோவில்

image

கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் கஜகிரி என்ற மலை மீது வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் நோய்கள், மன அழுத்தம், திருமண தடைகள் நீங்கும். பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News March 25, 2025

12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன

image

சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில் 42,46,751 பிறப்பு சான்றிதழ், 15,82,041 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 46,04,976 பிறப்பு சான்றிதழ்களும், 14,92,284 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் 43,01,961 பிறப்பு சான்றிதழ்களும், 12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

News March 25, 2025

ஒருசில நிமிடங்களில் விற்றுத் தீர்த்த IPL டிக்கெட்டுகள்

image

சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்.25) காலை 10.15 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்காக, ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளை விற்றுத் தீர்ந்தன. பெரும்பாலானோர், தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

News March 25, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!