News March 30, 2025
ஆசை ஆசையாய் வாங்கிய கார்- தற்கொலையில் முடிந்த சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் முருங்கை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்ற இளைஞர் கடன் மூலம் கார் வாங்கி ஆசை ஆசையாய் ஓட்டி வந்தார். ஒருகட்டத்தில் தவனை தொகையை செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 27ம் தேதி தற்கொலை முயற்சி செய்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
Similar News
News April 2, 2025
குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றம்பள்ளியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு <
News April 2, 2025
பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் பைக்கில் சென்றவர்கள் மீது அவ்வழியே அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில், ஹரிதாஸ், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.