News April 28, 2025
அரியலூர்: சிறுவகை கனிம குவாரி குத்தகை

அரியலூர் மாவட்டத்தில் கிராவல், மண், தீக்களிமண், லைம்கங்கர் மற்றும் இதர சிறுவகை கனிமங்களின் குவாரி குத்தகை உரிமங்கள் இணையவழி முறையில் வழங்குவதற்கான நடைமுறையானது வருகிற ஏப்.30-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இதன்படி குவாரி குத்தகை உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://mimas.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 28, 2025
அரியலூர்: ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை ஒட்டி மே 1ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சுய உதவி குழு பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News April 28, 2025
அரியலூர்: திருமண வரமளிக்கும் பஞ்சநதீஸ்வரர்

அரியலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள குரும்பலூரில் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சபூதங்களை விளக்கும் வகையில் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சலிங்க சிலைகள் உள்ளன. மேலும் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலில் சிவன்-அம்பாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யவும்.
News April 28, 2025
அரியலூர்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..