News March 21, 2024
அரியலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

அரியலூர் பெரியகற்கை கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். நேற்று(மார்ச்.20) ஆண்டிமடம் – விருத்தாச்சலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 13, 2025
தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Retail Sales Associate பணியிடங்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <
News April 13, 2025
அரியலூரில் தமிழ் கட்டாயம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.பி. ரத்தினசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழ் மற்ற மொழிகளை விட முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் இந்த பெயர் பலகைகள் வைக்க பட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
News April 12, 2025
அரியலூர்: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!