News December 31, 2024

அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்த சிறுமி திடீர் சாவு

image

ஒடிசா மாநிலம் மகஜன்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வர். இவரது மகள் சோனாக்ஷிலெங்கா (வயது 15). மாற்றுத்திறனாளி. அரவிந்தரின் தீவிர பக்தர்களான இவர்கள் கடந்த 25-ந்தேதி புதுச்சேரி வந்து அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சோனாக்ஷிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 6, 2025

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது இந்த நிலையில்
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டார் புதுச்சேரியில் மொத்தம் 845885 வாக்காளர்கள் உள்ளனர்

News January 6, 2025

ஏனாம் சென்றடைந்த புதுச்சேரி அமைச்சர்கள்

image

புதுச்சேரி மாநில ஏனாமில் 23 வது மலர் கண்காட்சி இன்று ஜி எம் சி பாலயோகி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் அரசு கொறடா ஆறுமுகம் எம் எல் ஏக்கள் பாஸ்கர் லட்சுமி காந்தன் ஆகியோர் ஏனாம் சென்றடைந்தனர்.  புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநித மல்லாடி கிருஷ்ணாராவ் வரவேற்றார்.

News January 6, 2025

மத்திய இணை அமைச்சருக்கு ஆசி வழங்கிய முதல்வர்

image

புதுச்சேரியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் நேற்று மதியம் வந்தார். கவர்னரை சந்தித்து பின்னர் அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். முதல்வர் ரங்கசாமி தீபாராதனை காண்பித்து, மத்திய அமைச்சருக்கு விபூதி பூசி ஆசி வழங்கினார்.