News March 26, 2025

அரசு பள்ளிகளில் சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர்

image

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுவை நகரப்பகுதியில் – 2, கிராமப்புறங்களில் – 2 , காரைக்காலில் – 1 என நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும். அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும், என்றார்.

Similar News

News March 31, 2025

வங்கி அதிகாரி போல் பேசி 11,000 மோசடி

image

புதுச்சேரி ஜான்சி நகரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் வங்கி அதிகாரி பேசுவதாக கூறி, வங்கி விவரங்களை கேட்டுள்ளனர். இதனை நம்பி சரவணனும் மர்ம நபருக்கு வங்கி விவரம் மற்றும் ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.11 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

News March 31, 2025

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

image

சுற்றுலா நகரமான புதுச் சேரிக்கு, வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். கடந்த சில வாரங்களாக பிளஸ் 2 பொதுத்தேர்வு காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் ரமலான், யுகாதி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் முதல் புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

News March 31, 2025

புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

image

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Field Investigator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்ப உள்ளதாகவும், 04.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!